அரசாங்கத்தில் பங்கெடுப்பதாயின் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லையென பதிலளித்துள்ளார் சஜித் பிரேமதாச.
புதிதாக பிரதமர் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் அனுப்பியிருந்த திறந்த மடலுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள சஜித், முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு பதில் தேவையென அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment