உணவுப் பஞ்சம்; பிரச்சாரத்தில் சிக்கியுள்ள ரணில்! - sonakar.com

Post Top Ad

Friday, 20 May 2022

உணவுப் பஞ்சம்; பிரச்சாரத்தில் சிக்கியுள்ள ரணில்!

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரசாயன பசளை இறக்குமதியை தடை செய்ததன் பின்னணியில் உருவான பாரிய குழறுபடிகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் ஓகஸ்ட் மாதமளவில் உணவுத் தட்டுப்பாட்டுக்கான சாத்தியக்கூறு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பொது மக்களிடமும் இது தொடர்பில் கருத்தறிந்து சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்கள் சில, பொது மகன் ஒருவரின் கருத்தை திரிபு படுத்தியுள்ளதன் விளைவாக, நாட்டில் மக்கள் உணவுப் பஞ்சத்தில் செத்து மடியப் போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக தோற்றம் உருவாகியுள்ளது.


உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்தால் வேறு வழியின்றி செத்து மடிய நேரிடும் என பொது மகன் ஒருவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு திரிபு படுத்தப்பட்டு, பிரதமர் கூறியதாக இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment