காடையர்களை ஏற்றி வந்த வாகனங்கள் மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Monday, 9 May 2022

காடையர்களை ஏற்றி வந்த வாகனங்கள் மீது தாக்குதல்

 



கோட்டா கோ கமயில் கடந்த 32 நாட்களாக அமைதியான முறையில் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மக்கள் மீது இன்று பெரமுன காடையர்கள் திடீர் தாக்குதல் நடாத்தி, போராட்டத்தை நிலை குலையச் செய்திருந்தனர்.


மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு வெளியே வந்த நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


எனினும், தற்சமயம் காடையர்கள் கூட்டத்தை பொது மக்கள் எதிர் கொண்டு வருவதுடன் பெரமுன காடையர்களை ஏற்றி வந்த பேருந்துகள் பல இடங்களில் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment