கோட்டா ஆதரவு: நசீர் - காதர் - முஷரப் தீவிரம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 May 2022

கோட்டா ஆதரவு: நசீர் - காதர் - முஷரப் தீவிரம்!

 


ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை விவாதிப்பதற்கு ஏதுவாக ஏனைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதற்கான பிரேரணை தோல்வி கண்டுள்ளது.


கோட்டாபய அரசின் குறுகிய நாட்கள் அமைச்சுப் பதவிகளை அனுபவித்த நசீர் அஹமது, காதர் மஸ்தன் மற்றும் முஷரப் முதுநபீன் குறித்த பிரேரணையை எதிர்த்து ஜனாதிபதிக்கான தமது ஆதரவை மீளுறுதி செய்துள்ளதுடன் தேசியப்பட்டியல் மர்ஜான் வழமை போன்று ஆளுங்கட்சி சார்பாக வாக்களித்துள்ளார்.


அத்துடன் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகி, பல்வேறு அமைச்சுப் பதவிகளுடன் வலம் வந்த ஜனாதிபதி விசுவாசியான அலி சப்ரியும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment