கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பேக்கரி தயாரிப்புகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது.
இச்சூழ்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு தீர்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment