வீடுகளை எரிப்பது தீர்வைத் தராது: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Friday, 20 May 2022

வீடுகளை எரிப்பது தீர்வைத் தராது: அலி சப்ரி

 



அரசியல்வாதிகளின் வீடுகளை எரிப்பதனால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் நீதி - நிதியமைச்சர் அலி சப்ரி.


மே 9 வரை அமைதியாகப் போராடிய மக்கள் மீது மஹிந்தவின் ஆதரவாளர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிலையில், பொது மக்கள் தரப்பிலிருந்து பதில் வன்முறை உருவாகியிருந்ததுடன் பெரமுனவின் அரசியல் சண்டியர்களாக வலம் வந்த முக்கிய நபர்களின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.


இந்நிலையில், கடந்த 5 வருடங்களில் 42 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்தியிருக்கும் தமக்கு, சாதாரணமாக கிடைக்கும் வருவாயின் 10 வீதம் கூட இல்லாத அரசியலினால் தற்போது தமது குடும்பத்தினரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இது அநாகரீகமான சூழ்நிலையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார். நாடு எதிர் நோக்கும் பிரச்சினைக்கு முடிவு காணப்பட வேண்டுமே ஒழிய வன்முறை தீர்வாகாது என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment