இடைக்கால நிர்வாகத்தின் பிரதமர் பதவிப் போட்டியில் நால்வர் இருக்கின்ற போதிலும் டலஸ் மற்றும் நிமல் தமக்கே குறித்த பதவி கிடைக்கப் போவதாக நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அரசாங்கம் மக்கள் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும் என டலஸ் அழகப் பெரும பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை, நிமல் சிறிபால டிசில்வா, 2020 தேர்தலிலேயே தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு விட்டுக் கொடுத்ததாக சொல்லிக் கொண்டிருப்பவராவார்.
இந்நிலையில், இருவரும் நம்பிக்கையுடன் இருக்கின்ற அதேவேளை, பெரமுன தரப்பு மஹிந்தவின் பெயரையே முன்மொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment