பிரதமர் பதவியைத் துறந்த போதிலும் தனது தந்தை தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இயங்குவார் எனவும் ஓடி ஒளியப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள அவர், தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.
இதேவேளை, ராஜபக்ச குடும்பம் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுவதையடுத்து அங்கும் மக்கள் போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment