வரும் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தினை தாக்கல் செய்யப் போவதாக தெரிவிக்கிறார் புதிய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த இரு மாதங்களுக்குள் பல தடவைகள் கை மாறியுள்ள நிதியமைச்சு தற்போது ரணில் வசம் உள்ளது. இந்நிலையில், இடைக்கால வரவு-செலவுத் திட்டம் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளதார ஸ்தீரத்தன்மையை ஆராயாது கடன் வழங்க முடியாது என உலக வங்கி கைவிட்டுள்ள நிலையில் அவசர மாற்றங்கள் நிகழ்கின்றமையும் ராஜபக்ச குடும்பம் சீன கடனை நம்பியே இதுவரை காலங் கடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment