வன்முறைகளைக் கை விட்டு அறவழிப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என தெரிவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாட்டில் இராணுவ ஆட்சி உருவாவதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
வன்முறைகைளைத் தூண்டி விடுவதன் ஊடாக அதனை சாதிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ள போதிலும் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment