பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு போராட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
கடந்த 32 தினங்களாக அமைதியாகப் போராடி வந்த மக்களை மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு வெளியே வந்த காடையர்கள் தாக்கியதையடுத்து நாடு முழுவதும் ஆளுங்கட்சியினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது.
எனினும், இன்னும் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி போராடி வருகின்றமையும் ஏலவே கனக ஹேரத், நிமல் லன்சா உட்பட்ட ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களின் வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment