தந்தை மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது அவரது பணியாளர் குழுவின் பிரதானியாக புதல்வன் யோசித ராஜபக்ச வகித்த பதவியை தற்போது சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ரணில் விக்கிரமசிங்கவுடன் விசுவாசமாகத் தொடரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முக்கிய நிர்வாக பதவிகளை பெற்று வரும் தொடர்ச்சியில் இந்நியமனமும் இடம்பெற்றுள்ளது.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கண்டு வரும் பெரமுன உறுப்பினர்கள் 21ம் திருத்தச் சட்டத்தை முடக்குவதற்கான கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் பசில் ராஜபக்ச அதற்குத் தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment