21ம் திருத்தச் சட்டத்தினை முறியடிப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொண்டு வரும் முயற்சி பின்னடைவை சந்தித்து வருவதாக பெரமுன உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இது தொடர்பில் பசில் நடாத்திய இரகசிய சந்திப்பில் 20 பேரளவிலேயே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விசேட சந்திப்பொன்றுக்கு வருமாறு ஜனாதிபதியும் அழைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆளுங்கட்சி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ள ஜனாதிபதி 21ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment