ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பின்னர் மைத்ரிபால சிறிசேன பெற்றிருந்த கொழும்பு 7, பகெட் வீதி இல்லத்தினைக் கைவிட்டு வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
குறித்த வீட்டினை அவருக்கு வழங்கியதற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் பின்னணியில், மைத்ரி அங்கு வாழ்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் வீட்டை மாற்றியுள்ளார்.
எனினும், தனக்கு முந்திய அனைத்து ஜனாதிபதியரும் அனுபவித்த அதே சலுகையையே தானும் பெற்றதாகவும், 100 வருட பழமை வாய்ந்த குறித்த வீடு. இதற்கு முன் கெஹலிய ரம்புக்வெலவினால் உபயோக்கப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மைத்ரி ஆதங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment