அமைதியான முறையிலான எதிர்ப்பை வெளியிடுவது மக்கள் உரிமை, ஆயினும் அதனை 'வேறு' திட்டங்கள் உள்ளவர்கள் கையகப்படுத்த அனுமதிப்பதன் ஊடாக நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
நாட்டைக் காப்பாற்றும் இறுதி வாய்ப்பு எனும் அடிப்படைச் சிந்தனையை விதைத்து பெரும்பான்மை மக்களின் உணர்வூடாக அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ச குடும்பத்தை தற்போது மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
எனினும், தொடர்ந்தும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே ஜனாதிபதி முயற்சி செய்து வருகின்ற நிலையில் மக்கள் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்படுவதாகவும் அதனூடாக நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நாமல் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment