அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் புதிய பிரதமர் ரணிலின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்திருந்த போதிலும் அதனை மீறி கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்கிறார் கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன.
இந்நிலையில், மீண்டும் ரணில் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முறுகல் ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு ரணிலே பொறுப்பெனவும் மைத்ரி தெரிவிக்கிறார்.
நிமல் சிறிபால டிசில்வா ரணிலோடு கை கோர்த்து அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளது போன்றே சமகி ஜனபல வேகயவிலிருந்தும் இருவர் பதவிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment