மஹிந்த ராஜபக்ச குடும்பம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லையென மறுத்துள்ளது கொழும்பு, இந்திய தூதரகம்.
திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ள மஹிந்த குடும்பம் அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும், செல்ல முயல்வதாகவும் தகவல் பரவியதையடுத்து வள்ளங்களிலும் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
எனினும், அவர்கள் இதுவரை அவ்வாறு இந்தியாவுக்குள் நுழையவில்லையென தூதரகம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment