தன் மீதான தாக்குதலைத் தூண்டியது ஹுனுபிட்டிய தொகுதியின் நகர சபை உறுப்பினர் சஹாப்தீன் என்கிறார் மஹிந்த கஹந்தகம.
தீவிர மஹிந்த பக்தியாளரான அவர், அன்றைய தினம் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க 50,000 பேர் வந்திருந்ததாகவும், வன்முறைகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லையெவும் தெரிவிக்கிறார்.
தன்னை சுற்றி வளைத்து எதிர்ப்பு வெளியிட்ட சஹாப்தீன்,. சமிக்ஞை காட்டியதன் பின்னணியிலேயே பிறிதொரு குழு வந்து தன் மீது தாக்குதல் நடாத்தியதாக கஹந்தகம மேலும் தெரிவிக்கின்றமையும், குறித்த நபருக்கு எதிராக வருடக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment