பிரதமர் பதவியை தாம் இராஜினாமா செய்து விட்டதாக மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
32 நாட்களாக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது மஹிந்தவை சந்தித்து விட்டு வெளியே வந்த பெரமுன காடையர்கள் தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பெரமுன முக்கியஸ்தர்களை மக்கள் தேடித் தாக்கி வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச உட்பட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் புதன் கிழமை வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஜனாதிபதி தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment