காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கக் கோரும் சில நிபந்தனைகளுடன் ரணிலுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
அவருடன், மனுஷ நானாயக்காரவும் கை கோர்த்துள்ளதுடன் ரணிலின் செயற்பாடுகளுக்குப் பக்க பலமாக இருக்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.
சமகி ஜன பல வேகய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ரணிலின் 'நல்ல' திட்டங்களுக்கு கை கொடுக்கத் தயார் என தெரிவித்துள்ள போதிலும், நேற்றைய தினம் நாடாளுமன்றில் மீண்டும் பெரமுனவினர் தமது ஆளுமையை வெளிக்காட்டியுள்ள நிலையில் அரசியல் ஸ்தீரத்தன்மை தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment