மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு வந்த பெரமுன காடையர்களால் கோட்டா கோ கம தாக்குதலுக்குள்ளானதுடன் போராளிகள் காயப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மற்றும் இரான் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அப்பகுதிக்கு விஜயம் செய்ததுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆயினும், அரச சார்பு காடையர்கள் போராட்ட பூமியை எரியூட்டியுள்ளதுடன் பொலிசார் தற்போது ஊரடங்கை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment