சம்பிரதாய அரசியலை மறந்து, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்க கை கோர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபல வேகயவுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்த நிலையில் ரணிலை பிரதமராக நியமித்து விட்டதாக சஜித் குறை வெளியிட்டுள்ள நிலையில், ரணிலிடமிருந்து எழுத்து மூலமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமகி ஜன பல வேகய, ஜே.வி.பி மற்றும் விமல் கூட்டணியும் அரசில் பங்கேற்கப் போவதில்லையென்று தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பெரமுனவிலிருந்தே அமைச்சர்களை தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment