மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில், அப்பதவியை யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தவறுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் சமகி ஜன பல வேகய கட்சி உதயமாகியதுடன் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரணில் பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment