தற்போது நிலவும் சூழ்நிலைக்காக மஹிந்த ராஜபக்ச பதவி விலகினாலும், அனைத்து கட்சி ஆட்சிக்குழுவின் பிரதமராக மஹிந்த ராஜபக்சவின் பெயரையே மீண்டும் பிரேரிக்கவுள்ளதாக விளக்கமளித்துள்ளார் பசில் ராஜபக்ச.
ஏற்கனவே மக்களின் ஆணையைப் பெற்ற அவரைத் தவிர வேறு யாரையும் பெரமுன முன் மொழியப் போவதில்லையென அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏலவே இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அமைச்சுக்களை வழங்கி 'கூட்டரசு' அமைக்கப் போவதாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ச முதலில் பதவி விலகுவார் என எதிர்பார்க்ப்படுகிறது. எனினும், வேறு கட்சிகள் இணையாத நிலையில் மீண்டும் அதே முகங்களே புதிதாக அமைச்சரவையை உருவாக்கப் போகின்றமையும் மக்கள் போராட்டத்துக்கு மத்தியிலும் ஜனாதிபதி தனது பதவியில் தொடரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment