கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டத்தைத் தான் தொடர்ந்தும் ஆதரிக்கின்ற போதிலும், கோட்டா பதவி விலகுவதற்கான சமிக்ஞைகள் எதுவுமில்லையென்கிறார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டை ஸ்தீரமான ஒரு நிலைக்குக் கொண்டு வந்து கோட்டா தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வது சிறந்தது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளோர் நாட்டைக் காப்பாற்றவே தாம் பதவிகளைப் பெற்றதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment