பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்த ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக நேற்றைய தினம் அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் அவரையும் இணைத்து தேர்வு இடம்பெறுகிறது.
பெரமுன உறுப்பினர்கள் ரஞ்சித் சியம்பலபிட்டியவுக்கே தமது ஆதரவு என தெரிவித்துள்ள நிலையில் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடனான போட்டியில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.
இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பை நடாத்த முடியாது என சபாநாயகர் மறுத்துள்ள நிலையில் தனி நபர்களின் பெயர் அழைக்கப்பட்டு வாக்குப் பதிவு இடம்பெறுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடாத்தக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் குரல் எழுப்பிய போதிலும், திட்டமிட்ட வாறே நடவடிக்கைகள் இடம்பெறும் என சபாநாயகர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment