ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று அரசில் இணைந்துள்ள சமகி ஜன பல வேகய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கட்டான சூழ்நிலையில், நாட்டை சீர்படுத்தும் முக்கிய பணிக்காக தாம் இணைந்து கொள்வதாக தெரிவித்து ஹரின் மற்றும் மனுஷ நானாயக்கார அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனர்.
எனினும், கோட்டாபய பதவி விலகுவது தொடர்பிலான முடிவு தரப்பட்டால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சஜித் நிபந்தனை விதித்திருந்ததுடன் இடை நடுவில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment