தலைமறைவாக இருந்த மஹிந்த ராஜபக்ச, ரணிலின் நியமனத்தையடுத்து கருத்து வெளியிட ஆரம்பித்துள்ள நிலையில் அவரையும், அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது தாக்குதல் நடப்பதற்குக் காரணமாக இருந்த மேலும் அறுவரையும் கைது செய்யக் கோரி நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த, ஜோன்ஸ்டன், சனத் நிசந்த, மொரட்டுவ மேயர் சமன்லால், டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் மா அதிபர், சஞ்சீவ எதிரிமன்ன உட்பட்டோரை கைது செய்யக் கோரியே நீதிமன்றில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், முறைப்பாடு மஜிஸ்திரேட் நீதிமன்றில் எதிர்வரும் 17ம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment