ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவர் என்ற தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென்கிறார் விஜேதாச ராஜபக்ச.
21ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இணைந்து பணியாற்றும் விஜேதாச, தற்போதும் கோட்டாவுக்கு அரசியல் தெரியாது எனவும் அப்படியொன்று இருந்தால் மீண்டும் தம் போன்றவர்களை அழைத்து அமைச்சுப் பதவிகளை தந்திருக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.
பசில் ராஜபக்சவின் பட்டியல் அடிப்படையிலேயே கடந்த காலத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதாகவம் பிழையான வழி நடாத்தல்களின் விளைவையே நாடு தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment