பிரதமர் பதவி; நால்வருக்கு 'பேரம்' பேசும் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Sunday 1 May 2022

பிரதமர் பதவி; நால்வருக்கு 'பேரம்' பேசும் ஜனாதிபதி

 


மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என தெரிவித்துள்ள நிலையில் அப்பதவியை வைத்து நால்வருடன் ஜனாதிபதி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினேஷ் குணவர்தன, மைத்ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் மத்தியிலேயே இவ்வாறு பேரம் நடப்பதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய பிரதமருடன் பழைய அரசியல் பங்காளிகளைக் கொண்டு ஆட்சியமைக்க ஜனாதிபதி முயற்சிக்கின்ற அதேவேளை, கோட்டா பதவி விலகு போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment