விமான நிலையங்களை கண்காணிக்கும் மக்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 May 2022

விமான நிலையங்களை கண்காணிக்கும் மக்கள்

 



ராஜபக்ச குடும்பம் தப்பியோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் விமான நிலையங்களை மக்கள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.


நீண்ட போராட்டத்தின் பின் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் வான் வழியாக நாட்டை விட்டு தப்பியோட முயல்வதாக போராட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையிலேயே, இவ்வாறு கண்காணிப்புகள் இடம்பெறுகின்ற அதேவேளை, திருகோணமலை கடற்படைத் தளம் ஊடாக வெளிநாடு பயணிக்கக் கூடும் என்ற ஊகம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment