முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் சண்டியர்களுள் ஒருவருமான அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவரோடு மொரட்டுவ நகர சபை ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்ற அதேவேளை, ஆளுங்கட்சியின் ஏனைய சண்டியர்களான ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த மற்றும் மொரட்டுவ மேயர் சமன் லால் ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விட்டு வெளியே வந்த குறித்த நபர்கள் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமயில் நிராயுதபாணிகளாக, அமைதியாக அரசுக்கு எதிரான எதிர்ப்பினை நடாத்திக் கொண்டிருந்த வேளையில் தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment