பொருளாதார சரிவில் சிக்கித் தவிக்கும் நிலையில் அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றித் தொடர்வதற்கு ஏதுவாக 695 பில்லியன் ரூபாவை வழங்கும் பிரதமரின் குறை நிரப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட ஆதரவு சேவைகள் மற்றும் அவசரகாலப் பொறுப்புத் திட்டங்களின் கீழ் இதற்கான நிதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ரணிலுக்கு நாடாளுமன்றில் ஆதரவு பெருகுவதை தவிர்ப்பதற்கு பெரமுனவில் ஒரு பகுதியினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment