அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மே 4ம் திகதி நாடாளுமன்றில் முன் வைக்கப் போவதாக தெரிவிக்கிறர் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
நம்பிக்கையில்லா பிரேரணை வெல்வதற்குப் போதுமான ஆதரவு கிடைத்திருப்பதாக எதிர்க் கட்சி தெரிவிக்கின்ற அதேவேளை, அதனை தோற்கடிப்பதற்குத் தேவையான ஆதரவு தம்மிடம் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
இதேவேளை, அரசுக்கான ஆதரவு குறைந்து விட்டதாக தெரிவித்து வந்த விமல் - கம்மன்பில அணி, புதிய அரசிலும் அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளமையும் மக்கள் போராட்டம் குறித்த அவதானம் தற்போது குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment