21ம் திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கப் போவதாக கூறினாலும், மறைமுகமாக ஜனாதிபதியை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே வரைபு அமைந்திருப்பதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் இரான்.
சட்டத்தரணிகள் சங்கமும் குறித்த வரைபினை நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அவர், தற்போதைய வரைபினூடாக நாடாளுமன்றின் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு மாற்றப்படும் எனவும், ஜனாதிபதி தான் விரும்பும் அமைச்சுக்களை தன் வசம் வைத்திருப்பதோடு நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரமும் வழங்கப்படும் என தெரிவிக்கிறார்.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment