அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள 21ம் திருத்தச் சட்டத்துக்கான வரைபு, போராடும் மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவிக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
20ம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஐ முழுமையாக அமுலுக்குக் கொண்டு வருவதே அடிப்படைத் தேவையாக இருக்கும் போது, மக்களை ஏமாற்றித் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இப்போது முன் வைக்கப்பட்டுள்ள 21ன் வரைபு அமைந்துள்ளதாக சஜித் விளக்கமளித்துள்ளார்.
ஏலவே சட்டத்தரணிகள் சங்கமும் இது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment