15 மணித்தியால மின் வெட்டு அபாயம்: நிதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Saturday, 7 May 2022

15 மணித்தியால மின் வெட்டு அபாயம்: நிதியமைச்சர்

 


நாட்டின் பொருளாதார சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், எரிபொருள் இறக்குமதிக்கு பெருந் தடை ஏற்படலாம் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்.


இப்பின்னணியில், 15 மணி நேர மின் வெட்டு குறித்தும் ஆராயப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதுடன் சர்வதேச உதவிகளும் அரசு உடனடியாக முகங் கொடுக்க முடியாத நிபந்தனைகளுக்குட்பட்டுள்ளன.


எனினும், அலி சப்ரி மூன்று அமைச்சுப் பொறுப்புகளை கையிருப்பில் வைத்துள்ளதுடன் ஜனாதிபதியும் தான் பதவியில் தொடர்வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றமையும் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு செவி மடுக்கத் தவறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment