முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச மற்றும் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட சூத்திரதாரியாகக் கருதப்படும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ உட்பட 13 பேருக்கு வெளிநாட்டு பிரயாணத் தடை விதித்துள்ளது கோட்டை நீதிமன்றம்.
பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சனத் நிசந்தவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை தற்சமயம் அனைவரும் 'பாதுகாப்பான' இடங்களில் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் பின்னணியிலேய இப்பிரயாணத் தடை பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment