உலகளாவிய ரீதியில் கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி இலங்கையர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதியின் புதல்வர் மனோஜ் ராஜபக்சவின் வீட்டு முன்னாலும் அங்குள்ள இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
தந்தையை பதவி விலகச் சொல்லுமாறு அங்கு கூடியவர்கள் புதல்வரை வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அமைச்சராக இருந்தவர்களே தவறிழைத்துள்ளதாகக் காட்டிக் கொள்ளும் வகையில், அமைச்சரவையே மாற்றுவதற்கே தற்போது ஜனாதிபதி முயற்சி செய்கின்றமையும் மக்கள் போராட்டம் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment