நிபந்தனையை ஏற்றால் ஜனாதிபதியுடன் சந்திப்பு: SLFP - sonakar.com

Post Top Ad

Thursday, 28 April 2022

நிபந்தனையை ஏற்றால் ஜனாதிபதியுடன் சந்திப்பு: SLFP

  



அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நிபந்தனை விதித்துள்ளது சுதந்திரக் கட்சி.


கட்சி முடிவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்ற சாந்த மற்றும் சுரேன் ஆகியோரை பதவி நீக்கினால் தமது கட்சி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விளக்கமளித்துள்ளது.


சர்வ கட்சி அரசொன்றை நியமிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும், பிரதான எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment