காபந்து அரசை நியமிப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச விடுத்த அழைப்பினை பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய நிராகரித்துள்ளது.
இதனையடுத்து ஜே.வி.பியும் தமது மறுப்பை வெளியிட்டுள்ளதோடு கோட்டாபே ராஜபக்ச பதவி விலக வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
பதவி நீக்கப்பட்ட விமல் - கம்மன்பில மற்றும் வாசு கூட்டணியினரை தனிக்கட்சியாகக் காட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்ற அதேவேளை, இன்று இடம்பெற்ற நான்கு அமைச்சர்களின் நியமனம் தற்காலிகமானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment