ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச எக்காரணங் கொண்டும் பதவி விலகப் போவதில்லையென இன்றும் நாடாளுமன்றில் ஆணித்தரமாக அறிவித்துள்ளார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் உரைக்குப் பதிலளித்த அவர், நாட்டின் இடம்பெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களின் பின்னணியிலும் இருப்பது 'இரத்தம்' காண விரும்பும் ஜே.வி.பியின் சதியெனவும் தெரிவித்தார்.
எல்லோரையும் சேர்த்து ஆட்சியொன்றை நடாத்த வாய்ப்பளிக்கும் வகையிலேயே அமைச்சரவை இராஜினாமா செய்ததாகவும் யாரும் முன் வராதமை அரசின் குற்றமில்லையெனவும் ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment