சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்ற போதிலும் அது உடனடியாக சாத்தியப்படப் போவதில்லையென தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
உறுதியான பொருளாதாரத் திட்டத்தினை அரசு முன் வைக்காது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி உடனடியாகக் கிடைக்காது என தெரிவித்துள்ள அவர், அதுவரை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதும் ஆரோக்கியமற்றது என்கிறார்.
நிதியமைச்சர் நாடாளுமன்றுக்கு இது குறித்து விளக்கமளித்ததன் பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை வாதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment