இலங்கையில் நள்ளிரவு திடீரென அரசாங்கம் பிரதான சமூக வலைத்தளங்களை முடக்கியிருந்த நிலையில் தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பத்துக்கான நிறுவன பிரதானியாக பணியாற்றி வந்த ஓசட சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடெங்கிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஊரடங்கை அமுலுக்குக் கொண்டு வந்துள்ள அரசு, தற்போது சமூக வலைத்தளங்களையும் முடக்கியுள்ளது.
இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்த நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளமையும் எதிர்வரும் தினங்களில், அரசாங்கம் 'பாதுகாப்பு' விளக்கங்களை முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment