மக்கள் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை ஸ்தீரப்படுத்த அரசு தவறி வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராடப் போவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரணில் - மைத்ரி கூட்டாட்சியைக் கவிழ்ப்பதில் மஹிந்த தரப்பின் அபிலாசைகளுக்கு பெரும் உதவியாக இருந்த குறித்த சங்கம் அண்மைக்காலமாக ஆளுந்தரப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் தொடர் போராட்டங்களை நடாத்தப் போவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment