அரசின் மீதான அதிருப்தியின் உச்சத்தையடைந்த நிலையில் நாட்டு மக்கள் வீதியிலிறங்கி போராட ஆரம்பித்திருந்தனர்.
மீரிஹனயில் ஆரம்பித்த போராட்டம் நாடெங்கிலும் பரவியிருந்த நிலையில் ஊரடங்கு, அவசரகால சட்டம் என பல அச்சுறுத்தல்களை ஆட்சியாளர்கள் உருவாக்கியும் நேற்றைய தினமும் மக்கள் போராட்டம் தொடர்ந்திருந்தது.
இச்சூழ்நிலையில், நேற்று மாலை திடீரென அமைச்சரவை இராஜினாமா என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதியை விலகக் கோரி ஆரம்பித்த போராட்டத்தை மக்கள் தொடர்கின்றனர். இன்று காலை மொரட்டுவ, நிட்டம்புவ உட்பட உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் அமைதியான முறையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment