ஆட்சியைக் கொண்டு வருவதற்காக தனது பிரஜாவுரிமையையும் இழந்து அர்ப்பணித்ததாக அழுது புலம்பி வந்த கீதா குமாரசிங்க, தனது கட்சியையே கை விட்டு அரசின் பக்கம் சாய்ந்து காத்திருந்த டயானா மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கி அழகு பார்த்துள்ளது அரசு.
புதிய அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பு இல்லையென்ற குறை பேசப்பட்டு வந்த நிலையில் அதையும் ஜனாதிபதி தீர்த்து வைத்துள்ளார்.
நாட்டு மக்களின் நாடித் துடிப்பறிந்த இளமையான அமைச்சரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பதவிகளைப் பெற்றவர்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment