கோட்டாபய ராஜபக்சவுக்காக 'வேலைக்கார வீரன்' பாடலை எழுதி தயாரித்திருந்தவர் மன்னிப்பு கோரியிருந்ததன் தொடர்ச்சியில், மஹிந்த ராஜபக்சவுக்காக 'ஆயுபோவே வா' எனும் பாடலை பாடிய பாடகி சஹெலி கமகே மன்னிப்பு கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை ஒரு மன்னனைப் போன்று சித்தரித்து குறித்த பாடலை இவர் பாடியிருந்த அதேவேளை, தேசிய தொலைக்காட்சிகள் அதனை தொடர்ச்சியாக ஒளிபரப்பியுமிருந்தன.
தற்போதைய மக்கள் எழுச்சியின் மத்தியில் கலைஞர்களும் முழுமையாக ஆட்சியாளர்களை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment