தான் பதவியில் நீடிப்பதற்கு ஏதுவாக மஹிந்தவின் பதவியை பலி கொடுத்தாவது காபந்து அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி செய்து வருகிறார்.
எனினும், ஏலவே பெரமுனவுக்குள் ஆதிக்கம் செலுத்தும் வியத்மக அணியினரோடு முறுகலில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட விமல் குழு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களில் நியமிக்கப்படக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி சொல்லும் இடைக்கால நிர்வாகம் பற்றி தமக்குத் தெரியாது எனவும் முதலில் அதனை அவர் விளக்கப்படுத்திய பின்னர் 'பெரமுன' இணைவதா இல்லையா என்பது குறித்து ஆராயப்படும் என்று அக்கட்சியின் தற்போதைய செயலாளர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, பெரமுனவுக்குள் பசில் ராஜபக்சவின் ஆதரவு அணியும் தனியாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment