கோட்டாவை தப்ப விடக் கூடாது: மக்கள் கடுங் கோபம்! - sonakar.com

Post Top Ad

Monday 4 April 2022

கோட்டாவை தப்ப விடக் கூடாது: மக்கள் கடுங் கோபம்!

  



அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக உயிர்களைப் பலி கொண்டு, நாட்டை நாசமாக்கிய கோட்டாபே ராஜபக்சவை நாட்டை விட்டு தப்பியோட விடக் கூடாது என போராட்ட களங்களில் மக்கள் கடுமையான கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.


கோட்டா - பைத்தியம் எனும் கோசம் வலுத்து வரும் அதேவேளை, நாட்டை சூறையாடிய ராஜபக்ச குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற அனுமதியாது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.


தேசத்தின் காவலன் என்ற போர்வையில் கோட்டாபய செய்த அநீதிகளுக்கு இந்நாட்டிலேயே தண்டனை வழங்கி துன்பங்களை அனுபவிக்க விட வேண்டும் எனவும் மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment